முட்டைக்காரன் !
ஏய் ஐலேசா, ஐலேசா,
என்று கத்திக் கொண்டே முட்டைக்காரன் பழனி முச்சக்கர வண்டியைய் ஓட்டி சென்றான்.
அவன் போறப்போ அவன் படிச்ச பள்ளி சீருடை போட்டுட்டு போர சின்ன பசங்க டாட்டா காட்டி போனது அவனுக்குள்ள என்னமோ யோசிக்க வச்சிடுச்சு,
ஆனாலும், அவன் ஒரு இடுக்கான வழில அவனோட மூச்ச புடிச்சுகிட்டு வலைந்து நெலிந்து ஒரு வழியா வந்துட்டான்,
அவன் நெத்தியில வழியூர வியர்வைய தொடைச்சிட்டு முன்னாடி நிக்குர ஆட்டோவ தள்ள உதவீட்டு, கீழ விழுந்த புத்தக மூட்டைகள் ல ஏத்தி விட்டுட்டு நகர ஆரம்ச்சான்,
எப்படியோ உஷ் தஸ் நு சொல்லீட்டே, ஒரு பெரிய மேட கடந்தான்..
அப்பாடி ஒரு வழியா நம்ம முதலாலி வீட்ட நெருங்கிவிட்டோம் நு பெருமூச்சு விட்டான் முட்டைக்காரன் பழனி,
ஆனால் அவன் வந்ததும் அந்த வீட்டில் இருந்த குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தனர்,
பழனி அதிர்ச்சியடைந்தான், பட்டாசுகளுக்கு பயந்து வண்டிய விட்டுட்டான்,
அது போய் ஓனர் வீட்டு கார் மேள டொம்முனு இடிச்சிடுச்சு
ஓடனே அந்த வீட்டு ஓனர்ரம்மா வைதேஹி வெளிய வந்து ஒரு மொறை மொறைச்சிட்டு கையில இருந்த விளக்க வச்சுட்டு வீட்டிற்கு வேர வழியா வர சொல்லி சைகை காட்டினாங்க,
பழனியும் பயந்துட்டு போனான்
போனதும் முள்ளங்கி சாம்பார் வாடை, அவன் நெனப்பு அவன் நாலு வருஷம் முன்னாடி அவங்க அம்மா செஞ்சு சாப்ட்ட நாள் மேல இருந்துச்சு,
அவன் அப்போ சாப்ட்டுட்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன "வேட்டைக்காரன்" படத்துக்கு போக தயார் ஆனான்.
ஆனா அவன் போறதுக்கு முன்னாடி அவங்க அம்மா அவனை அவங்க அப்பா சாப்பிடணும் னு தயிர் வாங்கிட்டு வர சொன்னாங்க
இவனும் இவன் அம்மா பேச்ச தட்டாம ஓடினான்,
அடுத்து நடந்த சம்பவம் அவன நடுங்க வச்சிடுச்சு..
அந்த நடுக்கம் அவன் தோளுல விழுந்துட்டு இருக்குற அடிய நினைவுக்கு வர வச்சது,
ஐயோ அம்மா என்ன ஏன் அடிக்குறீங்க, நான் என்ன செஞ்சேன் னு வலி தாங்க முடியாம கேட்டான் பழனி
அதுக்கு ஒடனே அந்த பத்தினி, என் பேரன் உன்னோட வண்டி பக்கம் வந்தா நீ ஏன் டா நகராம நின்ன ,
நீ தீட்டு னு தானே உன்ன வேற வாசல் வழியா வர சொல்லி முட்டையை வச்சுட்டு போக சொல்லிட்ட்ருக்கேன் ஆனா நீ என்னமோ எங்க ஆளுங்க மாதிரி உள்ள வந்து மோப்பம் புடிச்சு நின்னுட்டு இருக்க, உன்ன வேலைய விட்டு தூக்க சொல்லவா?
அய்யோ அம்மா என்ன மன்னிச்சிருங்க, னு பழனி மன்றாடிட்டு இருக்கப்போ அந்த பத்தினி பேரன் அவனோட பொம்மை கார வச்சு பழனி வண்டியில ஏத்திட்டான்.
.
.
.
கடைசி தயிர் பாக்கெட் ஓட வீட்டுக்கு ஓடி வந்து அம்மா ட குடுத்துட்டு படத்துக்கு ஓடலாம் னு நெனச்சா இவ்ளோ டிராபிக் ஆ இருக்கே..
சரி நம்ம குறுக்கு வழி ல வீட்டுக்கு போய்டலாம் னு வந்த பழனி மேல ஒரு ஆட்டோகாரன் இடிச்சுட்டான்..
கீழ விழுந்த பழனி அடி எதும் பட்டுருக்கா னு பாத்துட்டு கால மட்டும் ஓதரீட்டு குடு குடுன்னு வீட்டுக்கு ஓடி போய் பாத்தா ..
.
.
.
அவங்க அம்மா ரத்த வெள்ளத்துல இருக்காங்க..
ஐயோ போச்சே அம்மா எந்திரிங்க அம்மா, அம்மா எந்திரிங்க னு சொன்ன நாள் ஞாபகம் வந்திருச்சு பழனிக்கு..
கண்ணுல தண்ணியோட நிண்ட பழனிக்கு வைதேஹிங்குற பத்தினி முட்டை ஒடைஞ்சு இருக்கு னு சொல்லி கையில காச குடுக்காம அவன அனாதை பயலே னு திட்டிட்டு அவ வீட்டுக்கு வந்தவஙகள கவனிக்க போய்ட்டா.
வந்தவங்க அவள பாத்ததும் சொன்ன வார்த்தை பழனிக்கு ஒரு சிரிப்பை வர வச்சிடுச்சு
"வைதேஹி, நல்ல சிரிச்சுட்டு உபசரிக்குற உன்ன அந்த அம்பாள் என்னிக்குமே கை விடமாட்டா..உன்ன மாதிரி ஒரு நல்ல பண்பான குணமான பெண்ணை நான் பார்த்ததில்ல , நீ நீடூழி வாழனும் வைதேஹி" னு..
இவ்ளோ கஷ்டத்துளையும் அவனுக்கு எப்பிடி சிரிப்பு வருதோ..
ஆனாலும் ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சிட்டு நடையை கட்டினான்..
அவன் அந்த வீட்டு கதவ திறக்க போறப்போ "ஐய்யோ" னு ஒரு சத்தம்..
என்ன னு பாத்தா வைதேஹி பேரன் மாடில விளையாடிட்டு இருக்கப்போ அவன் கால் தடுமாறி மாடில இருக்க பரண்ல மாட்டிக்கிச்சு, அது மட்டும் இல்லாம அந்த பரண் பக்கத்துல இருந்த மரத்துல ஒரு பாம்பு இருந்தது..
வைதேஹிய பாக்க வந்தவங்க என்ன பண்ணனும்னு தெரியாம பயப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாதுனு சொன்னாங்களே தவிர வேற ஒன்னும் பண்ணல..
யாராச்சும் காப்பாத்துங்களேன்னு கத்தீட்டே இருந்த வைதேஹி பழனிய பாத்து தம்பி உன்ன கெஞ்சி கேக்கறேன் நீ நல்லாருப்ப என் பேரனை காப்பாத்துனு சொன்னா..
அவ சொல்லி முடிக்குறதுக்குள்ள பழனி அவ பேரனோட கீழ வந்துட்டான்..
பேரனை முத்த மழையில நனைய வச்சுட்டு அவமானத்தோட பழனிட்ட நான் இவ்ளோ உன்ன இழிவு படுத்தினதுக்கு ரொம்ப ஸாரி னு கூனி குறுகி கேட்டா..
"பரவால்ல மா", னு சொல்லிட்டு கிளம்பினான் பழனி.
உனக்கு என்மேல கோவம் இல்லையா னு கேட்டா வைதேஹி..
அம்மா, நான் கோவம்ணுறதல ஒரு குழப்பத்தோடு இருக்கேன், ஏன்னா அதனால தான் நான் இப்போ நீங்க என்ன சொன்ன மாதிரி அனாதையா இருக்கேன், ஒருவேளை நான் அப்படி இல்லாட்டி எனக்கு தெரிஞ்சிருக்குமோ என்னவோ! என் மனசு அப்படி தான் தெளிவா சொல்லுது அம்மா னு சொல்லிட்டு மறைந்து விட்டான் தீட்டான அநாதை முட்டைக்காரன் பழனி!
Comments
Post a Comment